பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி 8 இயக்குநர்கள், 18 இணை இயக்குநர்கள் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2021

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி 8 இயக்குநர்கள், 18 இணை இயக்குநர்கள் மாற்றம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா நேற்று வெளியிட்டுள்ள  அரசாணை: 


இயக்குநர்கள் மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி -தொடக்க கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா-அரசு தேர்வுகள் இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில  திட்ட இயக்கக கூடுதல் இயக்குநர்(2) குப்புசாமி-பள்ளி சாரா மற்றும்  வயது வந்தோர் கல்வி  இயக்குநராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கக இயக்குநர் ராமேஸ்வர  முருகன்-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக(1)வும்,



தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக  செயலாளர், நாகராஜ முருகன்-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக(2)வும், தொடக்க கல்வி இயக்குநர் பழனிச்சாமி- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராகவும், அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், உஷாராணி- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வி  மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் திட்ட இயக்குநர்(1), கண்ணப்பன்-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், செயலாளர் கண்ணப்பன் பொது நூலகத்துறையின் இயக்குராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  


இணை இயக்குநர்கள் மாற்றம்: 

பள்ளிக் கல்வி பணியில் வகுப்பு 2 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்கள் 18 பேர், நிர்வாக நலன் கருதி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர், நரேஷ்-பள்ளிக் கல்வி (பணியாளர் தொகுதி) இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர், கோபிதாஸ்-பள்ளிக் கல்வி ஆணையரக (இடைநிலைக் கல்வி) இணை இயக்குநராகவும், அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி), ராமசாமி-பள்ளிக் கல்வி  ஆணையரக இணை இயக்குநராக (மேனிலைக்கல்வி)வும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கக இணை இயக்குநர், அமுதவல்லி-பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநராகவும் (நாட்டுநலப்பணித் திட்டம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (நிர்வாகம்) ஜெயக்குமார்-பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநராகவும் (தொழிற்கல்வி),

ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர், ஸ்ரீதேவி- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராகவும், பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி) குமார்- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (பயிற்சி), ராஜேந்திரன்-அதே துறையின் நிர்வாக இணை இயக்குநராகவும், பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநர், வாசு- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்கக இணை இயக்குநராகவும், அதே துறையில் பணியாற்றிய இணை இயக்குநர்(3), உமா- அதே துறையில் இணை இயக்குநர்(2)ஆகவும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் பாஸ்கரசேதுபதி- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கக இணை இயக்குநர்(3) ஆகவும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநரான சசிகலா-அதே துறையில் நிர்வாக இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட இணை இயக்குநர், சாந்தி-தொடக்க கல்வி இயக்கக உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் இணை இயக்குநர்(2), செல்வகுமார்-அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இடைநிலைக் கல்வி, இணை இயக்குநராகவும், அதே துறையில் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த குமார்-அதே துறையின் மேனிலைக் கல்வியின் இணை  இயக்குநராகவும், பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் பணியாளர் தொகுதி இணை இயக்குநர், பொன்னையா-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினராகவும், பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த சுகன்யா-ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும், தொடக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக இணை இயக்குநராக இருந்த ஆனந்தி- மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. ஐயா ஐயா அறிவொளி ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்துவிட்டு புதிய பதவிக்கு செல்லுங்கள், பாவம் அவர்கள் தேர்வு எழுதி மூன்று வருடமாக காத்திருந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்,,,,,,kindly request

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி