பாரதியாரின் நினைவு தினம் - போட்டிகள் நடத்தி இளம் கவிஞர் விருது வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2021

பாரதியாரின் நினைவு தினம் - போட்டிகள் நடத்தி இளம் கவிஞர் விருது வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

2022-23ஆம் ஆண்டு முதல் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி இளம் கவிஞர் விருது வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!




மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி வரும் 2022-23 முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ , மாணவியர்களுக்கு " இளம் கவிஞர் விருது " மற்றும் பரிசுகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே , மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆகஸ்டு மாதம் முத வாரத்தில் ஒன்றிய அளவில் மாணவ மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளை தெரிவு செய்யவேண்டும்.


 ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ , மாணவியருக்கு வருவாய் மாவட்ட அளவில் , ஆகஸ்டு மாதம் 3 வது வாரத்தில் கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்யவேண்டும்.


வருவாய் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ , மாணவியருக்கு மாநில அளவில் , செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு , மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு மகாகவி நினைவு தினத்தன்று " இளம் கவிஞர் விருது " வழங்கி சிறப்பிக்கப்படுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி