ஜீரோ கலந்தாய்வு பி.இ.ஓ.,க்களுக்கு எப்போது சீனியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2021

ஜீரோ கலந்தாய்வு பி.இ.ஓ.,க்களுக்கு எப்போது சீனியர்கள் எதிர்பார்ப்பு

 


தினமலர் செய்தி

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (டி.இ.ஓ.,க்கள்) நடந்தது போல் தொடக்க பள்ளிகளின் ஆய்வு அலுவலர்களான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் (பி.இ.ஓ.,க்கள்) ஜீரோ கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மாநிலத்தில் முதன்முறையாக 127 டி.இ.ஓ.,க் களுக்கு கல்வித்துறை சார்பில் அனைத்து இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு (ஜீரோ கவுன்சிலிங்) மாநில சீனியாரிட்டி அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.இதுவரை அரசியல், அதிகாரிகளின் 'சிபாரிசு' அடிப்படையில் விரும்பிய மாவட்டங்களுக்கு மாற்றம் பெற்று வந்தனர். 



இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் வட மாவட்டங்களிலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது. தற்போது நடந்த ஜீரோ கலந்தாய்வில் இதற்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் சொந்த மாவட்டங்களை தேர்வு செய்யக் கூடாது என்ற நிபந்தனை இருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களை சீனியர் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.


இதுபோல் மாநிலத்தில் தொடக்க பள்ளிகள் ஆய்வு அதிகாரிகளான 836 பி.இ.ஓ.,க்கள் பல ஆண்டுகளாக யூனியன்களுக்குள் மாற்றம் பெற்று ஒரே மாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். இங்கும் 'சிபாரிசு அரசியல்' தான் கோலோச்சுகிறது. எனவே தீபாவளி விடுமுறைக்கு பின் பி.இ.ஓ.,க்களுக்கும் விரைவில் ஜீரோ கலந்தாய்வு நடத்த கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சீனியர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

3 comments:

  1. அடுத்த வருஷம் தான்.... நம்மாளுங்க வெறும் வாய் மட்டும் தான்

    ReplyDelete
  2. Beo exam ennachu...result when? Athaiyum maranthuttangala...?????????
    Thodarattum............

    ReplyDelete
  3. BEO க்களுக்கு மட்டும் இன்றி,
    உயர்நிலை,/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கும்
    ஜீரோ கவுன்சிலிங் நடத்த வேண்டும்,
    அதுவும் தொடக்க கல்வி துறையில்,
    ஒன்றிய அளவில்,
    பணிமூப்பு என்பதால் அவர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்துவதால்
    எந்த பாதிப்பும் இல்லை,
    பள்ளி கல்வித்துறையில் மாவட்ட அளவில், SENIORITY yai பின்பற்றினால் யாருக்கும் பாதிப்பு வராது,
    குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்கு,
    இடமாறுதல் வழங்கினால் ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிய,
    முடியும்,
    இல்லை என்றால்...
    அவர்களின் கவனம் முழுதும்....
    ...புதிய ஆசிரியர்கள் மாணவர்களை
    காணும் போது,
    அவர்களுக்கு
    புத்துணர்வு நிச்சயம் ஏற்படும்...
    சுய நல
    ஆசிரியர்கள் கொடுக்கும் அழுத்தத்தை பள்ளிக்கல்வி ஆணையர் புறந்தள்ள வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி