‘நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2022

‘நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

 


மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது; இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம்.


கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்.


இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 comments:

 1. ஆட்சி மாற்றம், நிரந்தர தீர்வு இல்லாத தேர்வு மற்றும் வழக்கு, சரியான திட்டமிடல் இல்லாமல் அவ்வப்போது எடுக்கும் அவசர முடிவு. நாங்கள் எப்படி முன்னேற முடியும்.

  ReplyDelete
 2. படித்த இளைஞர்களுக்கு வேலை,
  10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் அரசு வேலை. உயர் கல்வி படித்தவர்கள் தெரு வாசலில்.ஊதியம் 100 நாள் வேலை சம்பளத்தை விட குறைவு.

  ReplyDelete
 3. தமிழகத்தினில், முதலில் உரிய அரசு வேலைவாய்பிற்கான பயன்மிகு வழிமுறைகள் இங்கே கட்டாயம் உருவாக்கப்படல் வேண்டும்.

  மக்கள் நல ஆட்சி என்பதை நிலைநாட்டி டும் வகையில், தமிழகத்தில், புனிதமிகு மக்கள் நல அரசின் புதிய முயற்சியாக, அனைத்துத் துறைகள் சார்ந்த காலிப் பணி இடங்களையும் 50 சதவிகித அளவில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், 50 சதவிகித அளவிலான பணி இடங்களைத் தேர்வின் மூலமும் நிரப்பிட சட்டசபையில், புதிய தீர்மானம் இயற்றி, புதிய பயன்மிகு கொள்கை முடிவுகள் எடுத்திட அரசு முன்வர வேண்டும்.

  இதன்மூலம், அனைவருக்கும் அரசு பணி கிடைத்திட உரிய வழிகள் நிச்சயமாக ஏற்படும். அனைவராலும் அரசு பாராட்டப்படும் சூழ்நிலை ஏற்படும்.

  இது வன்றி, வெறும் திறன் பயிற்சிகள் மட்டுமே அளிப்பது எவ்விதமான பயனும் தராது என்பது மறுக்க இயலாத அறிவியல் உண்மை ஆகும்.

  கவிஞர்
  ஜெ. இராமநாதன்
  சிவகாசி.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி