'தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை குழுவின் தலைவராக கல்வியாளரை நியமிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:மாநில கல்விக் கொள்கை குழு முழுமையானதாகவும், சரியானதாகவும் இருந்தால் மட்டுமே நோக்கம் நிறைவேற முடியும். முதல்வர் அறிவித்துள்ள கல்விக்கொள்கை குழு பணியை நிறைவாக செய்யுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி முருகேசன் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி தொடர்பான குழுவின் தலைவராக ஒரு கல்வியாளரை நியமிப்பது சரியானதாகும்.கல்வி என்பது புத்தகம் மட்டுமல்ல பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல், தேர்வு அதன் முக்கிய உள் கூறுகளை தவிர சமூக அமைப்பு, பொருளாதார நடவடிக்கைகள், வாழ்வாதாரம், சமூக மாற்றம் என வேறுபட்ட கட்டமைப்புகளுடன் இணைந்த அடித்தளமாகும். சிக்கலான பிரச்னைகளை தீர்க்க குழு உறுப்பினர்கள் அவற்றுக்கான தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக தலைவருக்கு கல்வி அதன்படி நிலைகள் முழுமையான பரிமாணம் குறித்த தெளிவு இருப்பது அவசியம்.தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ விட சிறந்ததாக நம் கல்வி கொள்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழக அரசு தன் சொந்த கொள்கையை வகுக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
திறன் வாய்ந்த குழுவிற்கு அடிப்படை கட்டமைப்பில் இருந்து வழிநடத்த உயர்நிலை கல்வியாளர் தேவை. உயர் பதவியில் உள்ள கல்வியாளரை செயல் தலைவராக நியமிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Govt teachers tet passed candidates ku yean support panacea maatringa?
ReplyDeleteகடந்த ஆட்சியில் தான் பகுதி நேர ஆசிரியர்கள், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் எதிர் பார்த்த மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் கொடுத்து ஏமாற்றிவருகிறதே என்று இந்த அரசு அமைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அதே நிலை. ஐயா ஸ்டாலின் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
DeleteGovt teachers tet passed candidates Ku yean support pannave maatringa sir?
ReplyDelete2012,2013 tet application la 90 marks pass mark nu irnthuchu. But 2017,2019 application la 82 pass mark nu irunthchu. 2013 LA case potathuku arasin kolgai mudivunu court solliduchu.2013,2017,2019 candidates ku competitive exam nu govt solludhu. Apdinaa aided school la panam kuduthu job la join pannavangalukum intha arasu competitive exam vaikumaa? 2013
ReplyDeleteLa irunthu tet la pass pannaatha teachersum intha competitive exam yeluthanumaa?
Naam yevlo poraatam pannaalum court arasin kolgai midivu nu sollidum. Namma kastatha court yeppovum kandipaa purinjikaathu.
ReplyDeleteJudge pasanga bed padichu tet la 90 marks yeduthu pass pannitu job kedaikaama irunthaa thaan oru parenttaa pasanga padra kastam theriyum.
ReplyDeletesecuring 90 alone is not an eligibility to claim a job. read tet notification clearly. its only an eligibility to teach. not job.
Deleteகடந்த ஆட்சியில் தான் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் கொடுத்து ஏமாற்றிவருகிறதே என்று இந்த அரசு அமைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அதே நிலை. ஐயா ஸ்டாலின் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDelete