தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது - “நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது - “நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!


பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ‘’என்னைப்போன்ற ஆசிரியர்கள் பலர் மாதத்திற்கு பலமுறை ஆங்காங்கே போராடிக்கொண்டே இருக்கிறோம். ஓட்டு கேட்கும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்கிறோம். அதிலும் குறிப்பாக 2013-இல் தேர்ச்சிபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்கிறோம் என்று கூறினார்கள். எங்களுக்கு பணி நியமனம் வேண்டும். நாங்கள் பல மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள். இன்னும் இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டுபோகவில்லை என கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். கல்வித்துறை அமைச்சர் இங்கு வரும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு போகமாட்டோம். நாங்கள் எங்களுடைய பிள்ளைக்குட்டிகளை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் என்ன உங்கள் சொத்தையா எழுதித்தர கேட்கிறோம்?

நாங்கள் தேர்ச்சிபெற்று 13 வருடங்கள் ஆகிறது. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா? மாட்டீர்களா? மாதத்திற்கு ஒரு சட்டம் மாற்றுகிறீர்கள். எங்களுக்கு பதில் சொல்லுங்கள். எங்கள் உழைப்பை பாருங்கள். உங்கள் வாக்குறுதியை நம்பித்தானே ஓட்டு போட்டோம். இந்த கட்சி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுடைய விஷயத்தை மட்டும் கலந்தாலோசிக்க நேரமில்லையா? எங்களை என்னவேணாலும் செய்யுங்கள். இந்தமுறை நாங்கள் எதற்கும் துணிந்துதான் வந்துள்ளோம். தகுதியில்லாமல் வேலை கேட்கவில்லை. நாங்கள் அனைவரும் தகுதிபெற்ற ஆசிரியர்கள். உரிமையை கேட்கிறோம். பதில் சொல்லுங்கள்’’ என்று குமுறுகின்றனர்.

18 comments:

  1. நான் வந்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித்தேர்வில் 2012 96 மதிப்பெண் 2013 85 மதிப்பெண் 2017 91 மதிப்பெண் பெற்றும் இன் னும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆசிரியரே

      Delete
    2. 2012 la pass aagiyum velai
      Kidaikkavillaiya

      Delete
    3. வருத்தப்படாதீங்க தோழரே பாஸ் பண்ண அனைவர்க்கும் ஆசிரியர் வேலை கிடைக்கும்
      நம்பிக்கை தளர விடாதீங்க

      Delete
  3. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் வந்து கலந்து கொள்ளுங்கள். வாழ்வா சாவா போராட்டம். போராடுவோம் வாருங்கள்

    ReplyDelete
  4. தயவு செய்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இருக்கும் பொழுது ஏன் இப்பொழுது தகுதி தேர்வு நடத்த வேண்டும்.
    தளபதி ஐயா கண்டிப்பாக நல்ல ஒரு முடிவு கூறுவார்.

    ReplyDelete
    Replies
    1. தளபதி அய்யா புடிங்கி தள்ளிடுவார்,, அவரால் புடுங்க முடியாத ஆணியே கிடையாது..🤣🤣🤣

      அவர் தான் beast படத்துல பாகிஸ்தான் தீவிரவாதியவே புடிச்சாரே??

      Delete
  6. Tntet exam vandhu 10 (or)11 varusam dhaan aagudhu Neenga Maddum 13 varusathukku munnadi
    Eppdi pass seidhavargal
    Lagic illamal solluringa

    ReplyDelete
  7. அரசுப்பள்ளியின் கல்வித்தரத்தை அரசே சீரழிக்கும் அவலம்தான் இந்த தொகுப்பூதியத் திட்டம். இது அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும் கேவலப்படுத்தும் நோக்கில் உள்ளது. 5000 ரூபாய் வாடகை கொடுத்து வாழும் நிலையில் உள்ள எந்த அனுபவமிக்க ஆசிரியரும் இந்த சொற்ப ஊதிய வேலைக்கு வரமாட்டார்கள். வருபவர்கள் எல்லாம் ஆசிரியப்பணியில் அனுபவமில்லாத இளைஞர்கள். அப்படியெனில் பல வருடம் முன்பே படித்து பல ஆண்டுகாலம் பணியாற்றி, தகுதித்தேர்வும் தேர்ச்சி பெற்று, தனியார்ப்பள்ளிகளில் கொத்தடிமைகளை விட கேவலமாக வாழும் எங்களைப் போன்றவர்களுக்கான நீதி ?

    சமூக நீதி சமூக நீதி என்கிறார்கள், அந்த நீதியை
    க் குழி தோண்டிப் புதைப்பது தான் இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திராவிட மாடலா ?

    ReplyDelete
  8. 2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்வோம் என்று எந்த இடத்திலும் முதல்வர் குறிப்பிடவில்லை.... இதுவரை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தான் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருக்கிறார்...

    ReplyDelete
  9. தற்காலிக ஆசிரியர் நியமனம் ஐடியா கொடுத்த அவுங்க ... சில்க்

    ReplyDelete
  10. அடுத்து வரும் தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்......

    ReplyDelete
  11. Tntet ....2013 - 91 marks.....2017 - 108 marks....i'm out of school no posting...

    ReplyDelete
  12. Certificate verification completed

    ReplyDelete
  13. இன்னுமா இந்த உலகம் ஆட்சியாளர்களை நம்புகிறது....

    ReplyDelete
  14. TNTET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக...போய் கொண்டிருக்கிறது எந்த ஆட்சியில் தான் இவர்களுக்கு உயிர் கிடைக்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி