எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2022

எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் ( University Departments ) / வட்டார மையங்கள் ( Regional Centers ) / அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னை பல்கலைக் கழகம் / இதர பல்கலைக் கழகங்கள் / சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் , சென்னை 600 025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் , சென்னை 600 006 அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள் : 


1 ) விண்ணப்பிக்கும் முறை :

 www.gct.ac.in , www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . 

2 ) விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் முடிவுறும் நாள் : 05.08.2022 துவங்கும் நாள் : 11.07.2022 

3 ) பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தலாம் . 

4 ) இந்த கல்வியாண்டில் எம்.பி.ஏ / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு , சான்றிதழ் பதிவேற்றம் , சான்றிதழ் சரிபார்ப்பு , கல்லூரி தேர்ந்தெடுத்தல் , தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் . 

5 ) மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com இணையதள முகவரியில் " INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES " பக்கத்தில் பார்க்கவும்.

தொடர்பு எண் .0422 / 2451100 


வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி