TNPSC - தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2022

TNPSC - தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

 

மருத்துவ துறை தொழில் ஆலோசகர் மற்றும் குடிசை மாற்று வாரிய சமூக அலுவலர் பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழக மருத்துவ சார்நிலை பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், குடிசை மாற்று வாரிய மேம்பாட்டு பணியில் சமூக அலுவலர் பணிக்கு, வரும், 12, 13ம் தேதிகளில் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கு, சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.


தேர்வுக்கான ஹால் டிக்கெட்,www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.


விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் வழியே மட்டும், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி