போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2022

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க முடிவு

வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கப்போவதாக முடிவு.


வரும் திங்கட்கிழமை அவர்களாக பயிற்சிக்கு சென்றுவிடுவார்கள் எனலாம் அல்லது போராட்டத்தை ஒடுக்க அரசு முயலலாம்


வரும் புதன்கிழமை வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த போராட்டம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படப்போவதில்லை.

2ஆம் தேதி திங்கள் முதல் 4 ஆம் புதன் தேதிவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடக்கவுள்ளது.


இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சியை அளிக்கப்போவதே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்தான்.மாநில கருத்தாளர்கள் மாவட்ட கருத்தாளர்கள் ஒன்றிய அளவில் பயிற்சியளிக்கும் கருத்தாளர்கள் என பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஞாயிற்றுகிழமை முடிவு எட்டப்படவில்லை எனில் திங்கட்கிழமை நடக்கும் பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தை தொடர்வது எனவும் அதற்கு மற்ற ஆசிரியர் சங்கங்களும் முழு ஆதரவை தரவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

  1. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,...

    ReplyDelete
  2. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி