50 % TET தேர்ச்சி மதிப்பெண்கள் - TET தேர்வுகள் எழுதியுள்ள தேர்வர்களின் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2023

50 % TET தேர்ச்சி மதிப்பெண்கள் - TET தேர்வுகள் எழுதியுள்ள தேர்வர்களின் கோரிக்கை

 

நடந்து முடிந்த டிஇடி தேர்வுகள் பொதுவாகவே மிகவும் கடினத் தன்மையுடன் வினா அமைப்பு அமைக்க பெற்றிருந்தது நாம் அறிந்த ஒன்று. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் படித்து தேர்வு எழுதி இருந்தாலும் , கேட்கப்பட்ட வினாக்கள் HOT என்ற உயர் சிந்தனை வினா அளவிலேயே இருந்தது . மேலும் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் TET தேர்வுகளில் தேர்ச்சி பெற 82 என்ற மதிப்பெண்களை ( 55 % ) கொடுத்திருந்தனர். அப்போது TET தேர்வு மட்டுமே பணி நியமனத்திற்காக இருந்தது.


ஆனால் தற்போது பணி நியமனம் பெற இரண்டாவதாக மேலும் ஒரு நியமனத் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் TET தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 50 % ஆக இருந்தால் ( 75 மதிப்பெண்கள் ) சற்றே நிம்மதியுடன் , நம்பிக்கையுடன் அடுத்த தேர்வு எழுத தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தயாராக வாய்ப்பு உள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல அது ஒரு தகுதி தேர்வு மட்டுமே . அதாவது 75 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற அறிவிப்பை வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமுகஸ்டாலின் அவர்களுக்கு பணிந்து கோரிக்கை விடுக்கிறோம் - நன்றி .

3 comments:

  1. ஆளுக்கொரு ஆசை.

    ReplyDelete
  2. 75 மார்க்க மாத்த வேண்டாம் linkage என்ற பாடத்திட்டத்தை நீக்க சொல்லுங்க நாம 100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெரலாம். தற்போது தமிழ் ஆங்கிலம் இலக்கணம் grammer

    ReplyDelete
  3. Above 55 percentage eduthu pass panniyavarkal ivvalovu naal kastapattavarkalin nilamai ennavathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி