BT TO PG Promotion - ஆசிரியர்கள் கவனத்திற்கு ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2023

BT TO PG Promotion - ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

அனைவருக்கும் வணக்கம், 

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி, முதலில் முதுகலை பட்டம் பயின்று PG பட்டம் பெற்றுவிட்டு, அதன் பிறகு அதே பாடத்தில் மூன்று ஆண்டு இளங்கலை பட்டம் பெற்று இருந்தாலும் கடந்த மூன்று ஆண்டுளாக Same Major ஆகக் கருதி PG பதவி உயர்வு வழங்கப்பட்டு PGயாக பதவி உயர்வில் சென்று பணிபுரிந்து வருகிறார்கள். எனவே அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்த தகவலை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு PG யாக பதவி உயர்வில் செல்லுமாறு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எந்த CEO வாவது PG க்கு  பின்னால் பயின்ற பட்டப் படிப்பை Same Major ஆக எடுத்துக் கொள்ள முடியாது என மறுத்தால், உடனடியாக சென்னை சென்று Joint Director (Higher Secondary) திருமிகு , இராமசாமி அய்யா அவர்களைச் சந்தித்து தங்களின் PG Panel Proposal Copy யுடன் சம்பந்தப்பட்ட CEO மறுத்த விபரத்தை கூறி (JDHS) அய்யாவிடம் மனு கொடுத்தால் உடனடியாக Panel வாங்க மறுக்கும் CEO மீது நடவடிக்கை எடுப்பதோடு, உங்கள் பெயரினை PG panelலில் சேர்த்து PG யாக பதவி உயர்வு வழங்குவார்கள் என்பதையும் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


 இவண், நல்லாசிரியர், ஆ வ அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம். கைபேசி எண் : 94436 19586

6 comments:

  1. UG degree படிக்காமல் எப்படி pg படிக்க முடியும்???

    ReplyDelete
  2. ஏற்கனவே ஒரு பாடத்தில் UG முடித்து இருந்தால் Cross major ல் PG முடித்து இருக்கலாம்

    ReplyDelete
  3. நீ எல்லாம் எப்படி படுச்சு வாத்தியாரா இருக்கின்னே தெரியல ....அதெப்படி Ug முடிக்காம Pg முடித்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் மூதேவி...10+2+3+2 படித்திருக்கனும்..இந்த அஞ்சரைகளால் பிரச்சனையே இவஜ் பாட்டுக்கு தூண்டியுட்டு போயிரான்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை எனில் அமைதியாக இருக்கவும் மேதை போல பேசாதீர்கள்

      Delete
  4. பதவி உயர்வுக்கான அரசாணையைப் படி

    ReplyDelete
  5. நீங்கள் தான் தெளிவடைய வேண்டும்...நான் M.Sc.B.Ed..M.phil chem முடித்து தற்போது M.A economics( DDE) முறையில் படித்து வருகிறேன்...மீண்டும் B.A economics படித்தால் நான் PG post க்கு போக முடியும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி