Breaking : புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2023

Breaking : புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி

 

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் வங்கிகளில் செலுத்தப்படும் ரூ2,000 நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 


மேலும் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

1 comment:

  1. வரவேற்கத்தக்க விஷயம்,ஏனென்றால் கருப்பு பணத்தை சேர்த்து உள்ளனர். சில மகான்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி