ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குடும்பத்தோடு கைது செய்ததற்கு கண்டனம் - இபிஎஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குடும்பத்தோடு கைது செய்ததற்கு கண்டனம் - இபிஎஸ்

 

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குடும்பத்தோடு கைது செய்ததற்கு கண்டனம் - இபிஎஸ் 

எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் @mkstalin அவர்களே,பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள்,

2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்,


 அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான  கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும்,  அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன். 


100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.


6 comments:

  1. Ithukellam karanam neee thaan...

    ReplyDelete
  2. Pona aatchiliyil posting padama,permeant Panama,salary variation. Indha moondrayum theervu solama vitathan karam thaan ithu...ipa vandhu posting poda solitu irukurayae

    ReplyDelete
  3. நியமனத் தேர்வை கொண்டு வந்ததே நீ தான் டா நாயே.....

    ReplyDelete
  4. பத்தாண்டு காலம் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது கடந்த அரசாங்கம். அதை திமுக வும் செய்வது தான் வேடிக்கை.

    ReplyDelete
  5. மாதம் 5 லட்சம் தந்தால் திருப்தி ஆவார்களா? எவ்வளவு தந்தாலும் பத்துவதில்லை உங்களுக்கு. அவர்களை கைது செய்யாமல் பணி நீக்கம் செய்யுங்கள். அப்பது தான் மற்றவர்கள் திருந்துவார்கள்.

    ReplyDelete
  6. இவன் வேற சும்மா இவன் தூக்கி கூவத்தில போட்டு மிதிங்கய்யா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி