எம்.பில். படிப்பு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு கிடையாது - பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2023

எம்.பில். படிப்பு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு கிடையாது - பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை

 

புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எம்.பில். படிப்பை முடித்தவா்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவா்களாக முன்பு பாா்க்கப்பட்டு வந்தது. இதனால், பெரும்பாலான மாணவா்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்து, எம்.பில். படிப்பைத் தோ்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கற்பித்தல் பணிக்கு எம்.பில். படிப்பு தகுதியானது இல்லை, எம்.பில். படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாகக் குறிப்பிட முடியாது என்று கூறி 2022-23 -ம் ஆண்டு கல்வி ஆண்டில் இருந்து எம்.பில். படிப்பு முழுவதுமாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது.


இதனை பொருட்படுத்தாமல் சில கல்வி நிறுவனங்கள் எம்.பில். படிப்பில் மாணவர்களை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எம்.பில். பட்டமானது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டம் கிடையாது என கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டி காட்டி பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 comment:

  1. அப்போ 10/03/2020க்கு முன்னாடி mphil முடிச்சி இன்சென்டிவ் வாங்கதாவைங்க என்ன சொம்பையா 🤔🤔🤔

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி