கோடை விடுமுறை & பள்ளி வேலைநாள் தொடர்பான மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2024

கோடை விடுமுறை & பள்ளி வேலைநாள் தொடர்பான மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை.

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அறந்தாங்கி அவர்களின் பள்ளி வேலைநாள் தொடர்பான சுற்றறிக்கை...

அறந்தாங்கி கல்வி மாவட்டம் தொடக்கக் கல்வி ) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 - ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு 6 - ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.


 நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 - ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணி நிமித்தம் காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


 இம்மாணவர்களுக்கு மீண்டும் 22/04/24 மற்றும் 23/04/24 ஆகிய தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். இவ்வகுப்பு மாணவர்களுக்கு 24/04/24 முதல் கோடைவிடுமுறை அளிக்கப்படுகிறது. 


பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


 தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் அனைவரும் அரசுவிடுமுறை இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகைப்புரிந்து மாணவர் சேர்க்கை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்தல் மற்றும் பிறப் பணிகளை ( ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் ) அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி