NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2025

NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

 

⭕ NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் 12.04.2025 அன்று வெளியாக உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION - FEB 2025 ) 22.02.2025 அன்று நடைபெற்றது . இத்தேர்வெழுத 2,30,345 மாணாக்கர்கள் விண்ணப்பித்தனர் . இத்தேர்வின் முடிவுகள் 12.04.2025 அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


 எனவே , தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) முடிவுகள் பிப்ரவரி 2025 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் . மேலும் இத்தேர்விற்கான ஊக்கத் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலும் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி