பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத் துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2025

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 1 மறுகூட்​டல், மறும​திப்​பீடு முடிவு​கள் இன்று (ஜூன் 30) வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.


இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்பு விவரம்: தமிழகத்​தில் பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடை​பெற்​றது. இந்த தேர்வு எழு​தி​ய​வர்​களில் மறுகூட்​டல், மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​களின் பதிவெண் பட்​டியல் இன்​று (ஜூன் 30) மதி​யம் வெளி​யிடப்​படு​கிறது. அதன்​ விவரங்​களை மாணவர்​கள் தேர்​வுத்​ துறை​யின் www.dge.tn.gov.in எனும் இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.


இந்த பட்​டியலில் இடம்​பெறாதவர்​களின் விடைத்​தாள்​களில் எவ்​வித மாற்​ற​மும் இல்லை என்​பது தெரிவிக்​கப்​படு​கிறது. மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​கள் மட்​டுமே மேற்​கண்ட தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் இருந்து தங்​களுக்​கான திருத்​தப்​பட்ட மதிப்​பெண் பட்​டியலை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். மேலும், அசல் மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கப்​படும் தேதி விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி