பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2025

பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள்

 

மாணவர்​களுக்கு தொழில்​நுட்​பங்​களை பயிற்​று​விப்​ப​தற்​காக பள்​ளி​களில் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்​கள் அமைக்​கும் பணி​களை பள்​ளிக்​கல்​வித் துறை மேற்​கொண்டு வரு​கிறது. தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்​களுக்கு கணினி​சார் அடிப்​படை அறி​வியலை​யும், செயற்கை நுண்​ணறிவு திறனை​யும் கற்​பிக்​கும் வகை​யில் டிஎன்​ஸ்​பார்க் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் ஏஐ, ரோபோட்​டிக்ஸ் போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களை பயிற்​று​விக்​கும் நோக்​கில் பள்​ளிக்​கல்​வித் துறை இந்த திட்​டத்தை முன்​னெடுத்​துள்​ளது. இதன்படி வாரத்​துக்கு 2 பாட​வேளை​களில் ஏஐ, ரோபோட்​டிக்ஸ் வகுப்​பு​கள் நடக்கும். அதில்

சிறந்து விளங்​கும் மாணவர்​கள், நவீன தொழில்​நுட்ப ஆய்​வகத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பயிற்சி அளிக்​கப்​படு​வார்​கள்.


இதற்​காக, முதல்​கட்​ட​மாக மாவட்​டத்​துக்கு ஒன்று வீதம் மொத்​தம் ரூ.15 கோடி​யில் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்​கள் அரசுப் பள்​ளி​களில் உரு​வாக்​கப்பட உள்​ளன. வரும் நவம்​பர் மாதத்​துக்​குள் இந்​தப் பணி​களை முடிக்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி