புதிய பாடத்திட்டம் இன்று வெளியீடு - கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் - Direct Link - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2026

புதிய பாடத்திட்டம் இன்று வெளியீடு - கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் - Direct Link

மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: 25-ந்தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ந்தேதி (இன்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை    இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ந்தேதி (இன்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப்படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப்படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி