நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2026

நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்

 

அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் கூடு​தலாக 10,023 இடங்​களை அதி​கரிக்க மத்​திய அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்​கு, மத்திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் மருத்​து​வர்​களின் பற்​றாக்​குறையை சமாளிக்க, அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் கூடு​தலாக 10,023 இடங்​களுக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. எம்​பிபிஎஸ் படிப்​புக்கு 5,023 இடங்​கள் மற்​றும் முது​நிலை மருத்​து​வப் படிப்​புக்கு 5,000 இடங்​கள் ஒதுக்​கப்​படும். இதன் மூலம் இந்​தி​யா​வில் மருத்​து​வக் கட்​டமைப்பு அதி​கரிக்​கும்.

மத்​திய அரசின் 3-ம் கட்ட திட்​டத்​தின் கீழ் கூடு​தல் மருத்​துவ இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் மாநில அரசுகள் மற்​றும் மத்​திய அரசின் மருத்​துவக் கல்​லூரி​களில் இளநிலை மற்​றும் முது​நிலை மருத்​து​வப் படிப்​பு​கள் அதி​கரிக்​கும். இந்த கூடு​தல் இடங்​கள் 2025 - 2026-ம் ஆண்டு முதல் 2028 - 2029-ம் ஆண்​டுக்​குள் அமல்​படுத்​தப்​படும். இந்​தக் கூடு​தல் இடங்​களை உரு​வாக்க ஒவ்​வொரு இடத்​துக்​கும் ரூ.1.50 கோடி செல​விடப்​படும். அந்​தத் தொகை​யில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​களின் உள்​கட்​டமைப்பு வசதி​கள், ஆய்​வகங்​கள், கருவி​கள் போன்ற மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

அதன்​படி, திட்ட அறிக்​கையை சமர்ப்​பிக்​கும்​படி மாநில அரசுகள் மற்​றும் யூனியன் பிரதேச அரசுகளைக் கேட்​டுக் கொண்​டுள்​ளோம். இந்​தப் புதிய திட்​டத்​தில் கிராமப்​புறங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான இடங்​களை அதி​கரிக்​கும் அதேவேளை​யில், விதி​முறை​கள், சீர்​திருத்​தங்​களை தேசிய மருத்​துவ ஆணை​யம் அறி​முகப்​படுத்தி உள்​ளது. அதில் மேம்​பட்ட மருத்​து​வக் கல்​வி, ஆசிரியர்​கள் நியமனம், அவர்​களுக்​கான தகுதி வரையறை போன்​றவை குறித்து விரி​வான வழி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

ஆண்​டு​தோறும் மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​களுக்கு அதிக எண்​ணிக்​கை​யில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்​கின்​றனர். தற்​போது கூடு​தலாக 10,023 இடங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ள​தால், மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யின் போது கணிச​மான இடங்​கள் கிடைக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி