க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2026

க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

 

முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப் படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​திவரு​கிறது. அதன்​படி, வரும் (2026-27) கல்வி ஆண்​டில் முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ள​தாக என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த டிச.14-ல் தொடங்கி ஜன.25-ம் தேதி​யுடன் முடிந்​தது. 4.11 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இந்​நிலை​யில், தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதற்​கான விரி​வான கால அட்​ட​வணை https://exams.nta.ac.in/CUET-PG என்ற தளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம். ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்​னஞ்​சலில் தொடர்பு கொள்​ளலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி