பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆங்கில பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது.
இதில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘வினாத்தாளில் 3 மதிப்பெண் மற்றும் இலக்கணப் பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.
மற்ற பிரிவு கேள்விகள் எளிதாகவே இருந்தன’’ என்றனர். பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் 9-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி