தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கை​ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2026

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கை​

தமிழக மேல்​நிலைப் பள்​ளி​களில் மாண​வியர் சேர்க்கை 76 சதவீதம், மாணவர் சேர்க்கை 71 சதவீத​மாக அதி​கரித்து புதிய சாதனை படைக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை (யுடிஐஎஸ்​சி) விவரங்​கள் தொடர்​பாக தமிழக அரசு கூறி​யிருப்​ப​தாவது: மேல்​நிலைப் பள்​ளி​களி​லும், கல்​லூரி​களி​லும் சேரும் மாணவ மாண​வியர் எண்​ணிக்கை அதி​முக ஆட்​சியை விட அதி​கரித்து தமிழகம் சாதனை​கள் படைத்​துள்​ளது.

கடந்த 2020-21 அதி​முக ஆட்​சி​யில் மேல்​நிலைக் கல்வி மாண​வியர்​கள் சேர்க்கை 49.8 சதவீத​மாக இருந்த நிலை​யில், 2024-25ல் 76 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

அதேபோல, 2020-21 அதி​முக ஆட்​சி​யில் மேல்​நிலைக் கல்வி மாணவர்​கள் சேர்க்கை 46.6 சதவீத​மாக இருந்த நிலை​யில், 71 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

குஜ​ராத்​தில் மாணவி​கள் 24.7 சதவீதம், மாணவர்​கள் 24 சதவீதம், மகா​ராஷ்டி​ரா​வில் மாணவி​கள் 47.1 சதவீதம், மாணவர்​கள் 46.7 சதவீதம், உத்​தரப்​பிரதேசத்​தில் மாணவி​கள் 31.7 சதவீதம், மாணவர்​கள் 31.1 சதவீதம், ராஜஸ்​தானில் மாணவி​கள் 33.6 சதவீதம், மாணவர்​கள் 34.2 சதவீதம், மத்​தி​யப் பிரதேசத்​தில் மாணவி​கள் 24.9 சதவீதம், மாணவர்​கள் 24.7 சதவீதம் என சேர்க்கை விகிதம் உள்​ளது.

இதர மாநிலங்​களைக் காட்​டிலும் தமிழகத்​தில் மாணவர் சேர்க்கை அதி​கரித்​திருப்​ப​தற்​கு விடியல் பயணம், புது​மைப் ​பெண், தமிழ்ப் புதல்​வன் போன்ற திட்​டங்​களே காரணம். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி