முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் ‘எமிஸ்’ தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2026

முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் ‘எமிஸ்’ தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்றம்

 

பள்ளி மாணவர்​களின் முழு ஆண்​டுத் தேர்வு மதிப்​பெண்​களை எமிஸ் தளத்​தில் ஏப்​.30-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு (தொடக்​கக் கல்​வி) அவர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தொடக்​கக் கல்வி இயக்​ககத்​தின்​கீழ் செயல்​படும் அனைத்து அரசு, அரசு நிதி​யுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 3-ம் பருவ மதிப்​பீடு மற்​றும் முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நடை​பெற்​றுள்​ளன.

இத்​தேர்​வு​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களின் மதிப்​பெண்​களை ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​கள் ஏப்​.30-ம் தேதிக்​குள் ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்​து, மாணவர் தேர்ச்சி அறிக்​கைக்கு வட்​டாரக் கல்வி அலு​வலர்​களிடம் ஒப்​புதல் பெற வேண்​டும்.

நடப்பு (2025-26) கல்வி ஆண்​டில் கற்​றல் செயல்​பாட்டை நிறைவு செய்​யும் மாணவர்​களை அடுத்த வகுப்​புக்கு தேர்ச்சி அளிப்​பது. மாற்​றுச் சான்​றிதழ் வழங்​கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி