முதுகலை பட்டப்படிப்புக்கான ‘கியூட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 'கியூட்' நுழைவுத்தேர்வு (பிஜி) நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கியூட் (பிஜி) நுழைவுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 157 பாடப்பிரிவுகளுக்கு கணினி வழியில் நடத்தப்பட்ட தேர்வை நாடு முழுவதும் 3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில் கியூட் நுழைவுத்தேர்வு முடிவுகளை என்டிஏ இணையதளத்தில் (www.exams.nta.nic.in/ceut-pg) வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என என்டிஏ அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி