சுற்றுச்சூழல் மேலாண்மை டிப்ளமோ படிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2026

சுற்றுச்சூழல் மேலாண்மை டிப்ளமோ படிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

சென்னை பல்​கலைக்​கழக நிலத்​தி​யல் (ஜி​யாலஜி) துறை​யின் தலை​வர் எம்​.சுரேஷ் காந்தி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை பல்​கலைக்​கழக கிண்டி வளாகத்​தில் இயங்கி வரும் நிலத்​தி​யல் துறை, நீடித்த ஆதார திட்​ட​மிடல் மற்​றும் மேலாண்​மைக்​கான புவி அறி​வியல் முறை​கள் என்ற புதிய டிப்​ளமா படிப்பை (Diploma in Geoscientific Methods for Sustainable Resource Planning and Management ) வரும் கல்வி ஆண்​டில் (2026-2027) அறி​முகப்​படுத்​துகிறது.

சுயநிதி அடிப்​படை​யில் தொடங்​கப்​படும் இந்த படிப்​பானது வளர்ந்து வரும் துறை​யான சுற்​றுச்​சூழல் மற்​றும் ஆதார மேலாண்​மை​யில் ஆராய்ச்சி திறன்​களை வலுப்​படுத்​த​வும் மாணவர்​களின் வேலை​வாய்ப்​புத்​திறனை மேம்​படுத்​தும் நோக்​கிலும் தொடங்​கப்​படு​கிறது.

இந்த ஓராண்டு கால படிப்​பில் பிஎஸ்​சி, எம்​எஸ்சி பட்​ட​தா​ரி​கள் சேரலாம். மேலும் பிடெக் சுற்றுச்சூழல் பொறியியல், சிவில் இன்​ஜினீயரிங், பிடெக் ஜியோ-இன்​பர்​மேட்​டிக்​ஸ், தொலை​யுணர்வு மற்​றும் பயன்​பாட்டு அறி​வியல் பட்​ட​தா​ரி​களும் சேர தகு​தி​யுடைய​வர் ஆவர்.

படிப்​புக்கு மொத்​தம் 18 கிரெடிட் வழங்​கப்​படும். மொத்​தம் 6 பாடங்​கள். 120 மணி நேர வகுப்​பறை பாடம் மற்​றும் களப்​பணி, செய்​முறை பணி ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி