கோடை வெயிலில் திறந்தவெளியில் செல்லக் கூடாது: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2026

கோடை வெயிலில் திறந்தவெளியில் செல்லக் கூடாது: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

கோடை வெப்​பத்​தின் தாக்​கத்​தில் இருந்து தற்​காத்​துக் கொள்ள வேண்​டுமென மாணவர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித்​துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்:

அனைத்து வித​மான பள்​ளி​களில் பணிபுரி​யும் ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் மற்​றும் மாணவர்​களும் இந்த கோடை வெப்​பத்​தின் தாக்​கத்​தில் இருந்து தங்​களை பாது​காத்து கொள்ள​வும் உடல்​நலனை பாது​காத்​துக் கொள்​வதும் அவசி​ய​மாகும். அதற்​கான சில அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதிக வெயில் உள்ள நேரங்​களில் குறிப்​பாக மதி​யம் 12 முதல் 3 மணி வரை திறந்​தவெளி​யில் செல்​வதை தவிர்க்க வேண்​டும். தண்​ணீர் தேவை​யான அளவு பரு​கு​வதற்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்தவேண்​டும். ஒவ்​வொரு பாட​வேளை தொடக்​கத்​தின்போதும் மாணவர்​கள் நீர் அருந்த வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும்.

ஓஆர்​எஸ் மற்​றும் வீட்​டில் தயார் செய்த எலுமிச்சை சாறு, நீர்​மோர், லஸ்​ஸி, பழச்​சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பரு​கலாம். பள்​ளி​யில் தேவை​யான ஓஆர்​எஸ் பாக்​கெட்​கள் மற்​றும் முதலுதவி பெட்​டகத்​தினை தயார் நிலை​யில் வைக்​கவேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி