நாடு முழுவதும் 5,500 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2026

நாடு முழுவதும் 5,500 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு

 

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான ‘நீட்’ தேர்வு நாடு முழு​வதும் சுமார் 5,500 மையங்​களில் இன்று நடை​பெறுகிறது. மருத்​து​வப் படிப்​பு​களில் சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள், தேர்வு எழுதுகின்​றனர். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட தேசியத் தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் ஆகியவை தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்​வில் (NEET - ‘நீட்’) தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. இந்த தேர்வை தேசியத் தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​துகிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் இன்று பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறுகிறது.

தமிழகத்தில் 30 நகரங்களில்.. தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 14 இடங்​களில் தேர்வு நடை​பெறும். அந்த வகை​யில், சுமார் 5,500 மையங்​களில் தேர்வு நடை​பெறுகிறது.

சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 9.47 லட்சம் மாணவர்​கள், 13.33 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 22.80 லட்​சம் பேர் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​துள்​ளனர். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும். இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் (தாவர​வியல், விலங்​கியல்) பாடங்​களில் இருந்து தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில் 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும்.

மொத்தம் 720 மதிப்பெண்கள்: ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படு​கிறது. ஒரு தவறான பதி​லுக்கு ஒரு மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட என்​டிஏ திட்​ட​மிட்​டுள்​ளது.

ஆள்​மாறாட்​டத்தை தடுக்​க.. கடந்த 2024-ம் ஆண்டு வட மாநிலங்​களில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் சிலர் ஆள்​மாறாட்​டத்​தில் ஈடு​பட்​டு, உண்​மை​யான தேர்​வர்​களுக்கு பதிலாக நீட் தேர்வு எழு​தி​ய​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பிஹார், ராஜஸ்​தான், ஜார்க்​கண்​டில் 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், ஆள்​மாறாட்​டத்தை தடுக்​கும் வித​மாக, ‘நீட் தேர்வு நடை​பெறும் மே 3-ம் தேதி மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 2-ம் தேதி ஆகிய 2 நாட்​களும் எம்​பிபிஎஸ் மாணவர்​களுக்கு விடு​முறை வழங்க வேண்​டாம்.

அத்​தி​யா​வசி​யக் காரணங்​கள் இருந்​தால் மட்​டும் விலக்கு அளிக்​கலாம்’ என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களின் நிர்​வாகங்​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் கடந்த வாரம் சுற்​றறிக்கை அனுப்​பியது. அதன்​படி, மருத்​துவ மாணவர்​களுக்கு நேற்று விடு​முறை வழங்​கப்​பட​வில்​லை. இன்​றும்​ அனைத்​து மாணவர்​களும்​ கல்​லூரிக்​கு வரு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு கட்​டுப்​பாடு​கள்: தேர்​வர்​கள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்லை என்று தேசி​யத் தேர்வு முகமை தெரி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி