த.வே.க அரசுக்கு வாழ்துகளும் , கோரிக்கைகளும் - தமிழ்நாடு பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2026

த.வே.க அரசுக்கு வாழ்துகளும் , கோரிக்கைகளும் - தமிழ்நாடு பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கம்

த.வே.க அரசுக்கு வாழ்துகளும் , கோரிக்கைகளும் - தமிழ்நாடு பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கம்.


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், புதிய அமைச்சர்களுக்கும் பகுதிநேர கணினி ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கணினி அறிவியல், கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை உருவாக்கி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்தி, அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இன்றியமையாத கணினிக் கல்வியை வழங்க வேண்டுகிறோம்.

2012 முதல் SSA திட்டப்பணியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பகுதிநேர கணினி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் எங்களை பணிநிரந்தரம் செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைவில் எங்களுக்கான தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு : கடந்த காலத்தில் எங்களது போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி