அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2026

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

 

தமிழக உயர்​கல்​வித் துறை செயலர் அருண்​ராய் வெளி​யிட்ட அரசாணை​: நடப்பு (2026-27) கல்வி ஆண்​டில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் தேவை​யுள்ள கலைப் பாடப் பிரிவு​களுக்​கும், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறி​வியல் பாடப் பிரிவு​களுக்​கும் 20 சதவீதம் கூடு​தலாக மாணவர்​களை சேர்க்க நிபந்​தனை​களு​டன் அனு​மதி அளிக்​கப்​படு​கிறது.

அதே​போல, அரசு உதவி​பெறும் கல்​லூரி​களில் தேவை​யுள்ள கலை, அறி​வியல் பாடப் பிரிவு​களில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவு​களுக்கு 15 சதவீத​மும், சுயநிதி பாடப்பிரிவு​களுக்கு 10 சதவீத​மும், தனி​யார் சுயநிதி கல்​லூரி​களில் கலை, அறி​வியல் பாடப் பிரிவு​களுக்கு 10 சதவீத​மும் கூடு​தலாக மாணவர்​களை சேர்க்க நிபந்​தனை​களு​டன் அனு​மதி அளிக்​கப்​படு​கிறது.

சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகங்​களால் முதன்​முதலில் ஒப்​பளிக்​கப்​பட்ட மாணவர் சேர்க்​கை​யின் அடிப்​படை​யில் கூடு​தல் சேர்க்கை மேற்​கொள்​ளப்பட வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகங்​களின் ஒப்​புதலும் பெறப்பட வேண்​டும். இந்த கூடு​தல் சேர்க்கை அனு​மதி நடப்பு கல்வி ஆண்​டுக்கு மட்​டுமே பொருந்​தும். தவிர, கூடு​தல் சேர்க்​கைக்​காக கூடு​தல் பணி​யிடங்​கள் கேட்​கக் கூடாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி