பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ல் தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2026

பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ல் தொடங்குகிறது

 

பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ம் தேதியும், பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை 8-ம் தேதியும் தொடங்குகின்றன. இத்தேர்வுகளை 63,447 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரையும், பிளஸ் 1 துணைத் தேர்வு (அரியர்) ஜூலை 8-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளை 233 மையங்களில் 63,447 மாணவர்கள் எழுதுகின்றனர்.

துணைத் தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக அரசு தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 29 முதல் ஜூலை 16 வரை அனைத்து வேலைநாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இது செயல்படும். 9498383075, 9498383076 ஆகிய எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வு நாட்களில் வினாத்தாள் குறித்த புகார்கள், கருத்துகளை dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி