விதிகள் 2026 - இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2026

விதிகள் 2026 - இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி!!




ஒரு இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய பின்னரே தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும்.

அதன் பின்னர், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பின்னரே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வைப் பெற முடியும்.

மேலும், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு, நடுநிலைப் பள்ளியில் 5 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னரே நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு உயர்வு பெற தகுதி பெற முடியும்.

இதனால், ஒரு இடைநிலை ஆசிரியர் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியை அடைய, பல கட்டங்களைக் கடந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை தாமதப்படுத்தும் மிகப்பெரிய அநீதியாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி