தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 14 இளநிலை பாடப்பிரிவுகள், 3 டிப்ளமோ படிப்புகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பட்டப்படிப்புகளும் உள்ளன. வேளாண் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 8,103 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 340 இடங்களுக்கும் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நேற்று முன்தினத்துடன் விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைந்த நிலையில், வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டயப் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு வரும் 29-ம் தேதியும், பட்டப் படிப்புக்கான இணைய வழி கலந்தாய்வு ஜூலை 6 முதல் 12-ம் தேதி வரை யும் நடைபெறுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஜூலை 16-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும். பொதுப் பிரிவினர் மற்றும் 7.5 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 9-ம் தேதி வேளாண் கல்லூரிகள் திறக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்விப் பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற செல்போன் எண்ணிலும், ugadmissions@tnau.ac.in என்ற மெயில் மூலமாகவும், வார நாட்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்விப் பாடங்களுக்கான விவரங்களை 9865703537 என்ற செல்போன் எண்ணிலும் agridean2015@gmail.com என்ற மெயில் மூலமாகவும் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி