கியூ.எஸ். உலக தரவரிசையில் 597-ம் இடம் பிடித்த விஐடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2026

கியூ.எஸ். உலக தரவரிசையில் 597-ம் இடம் பிடித்த விஐடி

 


விஐடி பல்​கலைக்​கழகம் கியூ.எஸ். உலக பல்​கலைக்​கழகதரவரிசை பட்​டியலில் 94 இடங்​கள் முன்​னேறி 597-ம் இடத்தை பிடித்​துள்​ளது.

உலகளா​விய உயர்​கல்வி பகுப்​பாய்வு நிறு​வன​மான ‘கியூ.எஸ். குவாக்​கரெல்லி சைமண்ட்​ஸ்’ 2027-ம் ஆண்​டுக்​கான உலக பல்​கலைக்​கழக தரவரிசைப் பட்​டியலை வெளி​யிட்​டது. 1500-க்​கும் மேற்​பட்ட பல்​கலைக்​கழகங்​களில் ஆராய்ச்சி மற்​றும் கண்​டு​பிடிப்​பு, கற்​றல் அனுபவம், வேலை​வாய்ப்​பு, சர்​வ​தேச தொடர்​பு​கள், நிலைத்​தன்மை ஆகிய 5 அம்​சங்​களை ஆய்வு செய்து முடிவு​களை வெளி​யிட்​டது. நிகழாண்​டில் விஐடி பல்​கலைக்​கழகம் கியூ.எஸ். தரவரிசையில் 94 இடங்​கள் முன்​னேறி 597-ம் இடத்தை பிடித்​துள்​ளது. 2026-ம் ஆண்​டில் கியூ.எஸ். தரவரிசை​யில் 691-ம் இடத்தை விஐடி பிடித்​திருந்​தது.

இதுகுறித்து விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறும்​போது, “உல​கம் முழு​வதும் உள்ள கல்வி நிறுவனங்களு​டன் நில​வும் கடுமை​யான போட்டி சூழலில் விஐடி பல்​கலைக்​கழகம் கியூ.எஸ். உலக பல்​கலைக்​கழக தரவரிசை​யில் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் அடைந்​திருப்​பது பெரு​மைக்​குரிய விஷய​மாகும். கியூ.எஸ். உலக பல்​கலைக்​ கழக தரவரிசை​யில் நிலைத்​தன்மை பிரி​வில் 2026-ம் ஆண்​டில் 352-ம் இடம் பிடித்​ததுடன், இந்​தி​யள​வில் 7-ம் இடம் பிடித்​தது.

அதேபோல கியூ.எஸ். உலக பல்​கலைக்​கழக பாடப் ​பிரிவு தரவரிசையில் 2026-ல் பொறியியல் மற்​றும் தொழில்​நுட்​பத்​தில் விஐடி 119-ம் இடத்​தை​யும் இந்​திய அளவில் 6-வது இடத்​தை​யும் பிடித்​தது. கற்​பித்​தலில் புது​மை, ஆராய்ச்சி மேம்​பாட்​டில் திருப்புமுனை​களை ஏற்​படுத்​தி,உலகள​வில்​ முதல்​ 200 தரவரிசை பெறுவதை நோக்​க​மாக கொண்​டுள்​ளது” என்​றார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி