டிப்ளமோ படித்து பணியில் இருப்பவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2026

டிப்ளமோ படித்து பணியில் இருப்பவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

 

பாலிடெக்​னிக் டிப்​ளமோ படித்து பணி​யில் இருப்​பவர்​கள், பகுதி நேர பிஇ படிப்​பில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் பி.ரத்​தின​சாமி நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் இயங்​கும் 6 அரசு பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் 2 அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​களில், நடப்பு கல்வி ஆண்​டில் (2026-27) பகுதி நேர பிஇ படிப்​பில் சேர ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

பொறி​யியல் டிப்​ளமோ படித்து வேலை​வாய்ப்பு பெற்று ஓராண்டு பணிபுரிந்த அல்​லது பணிபுரிந்து கொண்​டிருப்​போர் இதற்கு விண்​ணப்​பிக்க தகு​தி​யுடைய​வர் ஆவர். அவர்​கள் www.ptbe-tnea.com என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். தேவை​யான சான்​றிதழ்​களை​யும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். பதிவு கட்​ட​ணம் ரூ.900. எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு ரூ.450 மட்​டும்.

ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை மேற்​குறிப்​பிட்ட இணைய தளத்​தில் விரி​வாக அறிந்​து கொள்​ளலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி