காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2026

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் உத்தரவு

 

​முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். பெரி​யாரின் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி இத்​திட்​டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத் திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி​களுக்கு விரி​வாக்​கம் செய்ய ஏது​வாக, பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி தொடங்​கு​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார்.

மேலும் ‘‘சமூக நலம், மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களை, பயனாளர்​களான குழந்​தைகள், பெண்​கள், திருநங்​கைகள், மூத்த குடிமக்​களிடம் தடை​யின்​றி, துரித​மாக கொண்டு சேர்க்க வேண்​டும். குழந்​தைகள் பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும். போதைப் பொருள் பழக்​கத்​துக்கு ஆளா​காத​படி அவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். அந்த பழக்​கத்​துக்கு ஆளான குழந்​தைகளை மீட்டு மறு​வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றும் அறி​வுறுத்​தி​னார். இந்த கூட்​டத்​தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி, தலை​மைச் செயலர் சாய்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரின் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் குறித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்ற உயர் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்​ளி​களில் மட்​டும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதா அல்​லது அரசு மற்​றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்​ளி​களி​லும் சேர்த்தே அமல்​படுத்​து​வதா என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும். அப்​போது​தான் எத்​தனை மாணவ, மாணவி​கள்​ பயன்​பெறு​வார்​கள்​ என்​ற விவரம்​ தெரிய​வரும்​’’ என்​று தெரி​வித்​தனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி