புதிய பாடத்திட்டத்தின்படி பேசுதல், கலந்துரையாடல் போன்ற வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர்களின் 70 சதவீத பங்கேற்பை உறுதிசெய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கெனவே 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களின்படி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 4 முதல் 8-ம் வகுப்புகளுக்கு 2027-28-ம் கல்வியாண்டிலும், 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 2028-29-ம் கல்வியாண்டிலும் புதிய பாடநூல்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தின்படி வகுப்பறை செயல்பாடுகள், ஆசிரியர்கள் கையாளும் முறை, கல்வி அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாடநூல்களில் உள்ள செயல்பாடு, பயிற்சி,விளையாட்டு, செயல்திட்டம் ஆகியவற்றில் கற்றல் விளைவுகளை அறிந்து ஆசிரியர்கள் வகுப்பறை செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டும்.
கலந்துரையாடல் போன்ற வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பு 70 சதவீதம் இருக்கவேண்டும். இதையெல்லாம் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல், புதிய பாடத்திட்டத்தின்படி திறன்களை மையமாகக் கொண்ட மதிப்பீட்டு முறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. மனப்பாட முறையை பின்பற்றாமல் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் வினாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கற்றல் பயணம், நானே செய்வேன், திறனறி மதிப்பீடு ஆகிய 3 வகையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை கையேட்டில் அவசியம் பகிர வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி