திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:457
குறள்:
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
பொருள்:
மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.
Good beginning makes a good ending.
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன்.
2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
வீழ்வது தோல்வி அல்ல; மீண்டும் எழாமல் இருப்பதே தோல்வி.
Thought for the Day :
Falling is not failure; refusing to rise again is.
பொது அறிவு :
1.உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய நாடு எது?
ரோம்.
2.இந்தியாவின் முதல் முறையான சூரியசக்தி விமான நிலையம் எது?
கொச்சின், கேரளா.
English words :
Remarkable - Worth noticing; extraordinary, குறிப்பிடத்தக்க / அசாதாரணமான.
Acquire – Obtain, பெறு.
புவியியலும் சுற்றுசூழலும் :
இது உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் அடிப்படையானது.
கிராம நிர்வாகத்தின் முக்கிய அமைப்புகள்
1. கிராம சபை
18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்
NMMS :
MAT
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு
விடை: (1)
ஜூலை 24
நீதிக்கதை
"வெற்றி மட்டும் இலக்கு அல்ல"
ஒரு பள்ளியில் அம்பிகா மற்றும் அருணன் என்ற இரு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். பள்ளியில் ஓவியம், ஓட்டப்பந்தயம், பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெறவிருந்தன.
அம்பிகா, "நான் வெற்றி பெறவில்லை என்றால் என்ன செய்வேன்?" என்று பயந்து எந்தப் போட்டியிலும் பெயர் பதிவு செய்யவில்லை.
ஆனால் அருணன், "வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்றாலும் புதிய அனுபவம் கிடைக்கும்" என்று நினைத்து மூன்று போட்டிகளில் பங்கேற்றான்.
போட்டி நாளில் அருணன் ஓட்டப்பந்தயத்தில் தோற்றான். ஆனால் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசும், ஓவியப் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றான். அதைவிட முக்கியமாக, அவனுக்கு தன்னம்பிக்கை, புதிய நண்பர்கள், மேடையில் பேசும் துணிச்சல் ஆகியவை கிடைத்தன.
இதைப் பார்த்த அம்பிகா, "நான் பயத்தால் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்பேன்" என்று முடிவு செய்தாள்.
நீதி:
போட்டிகளில் பங்கேற்பது வெற்றிக்காக மட்டுமல்ல; தன்னம்பிக்கை, திறமை, அனுபவம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும்.
இன்றைய செய்திகள்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி