வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2026

வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

 

வெற்​றிப் பள்​ளி​கள் செயல்​பாடு​களைத் தீவிர​மாக கண்​காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித்துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக்கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களு​ட​னான இணை​ய​வழி ஆய்​வுக் கூட்​டம் சமீபத்​தில் நடை​பெற்​றது.

இதில் வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டத்​தின் மூலம் வட்​டாரங்​கள் வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்​களிடையே போட்​டித் தேர்​வு​கள், உயர்​கல்வி மற்​றும் தொழில் வாய்ப்​பு​கள் குறித்த விழிப்​புணர்வு சிறப்​பாக ஏற்​படுத்​தப்​பட்டு வரு​வது குறித்து எடுத்​துரைக்​கப்​பட்​டது. மேலும், வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டத்​தின் செயல்​பாடு​களை வலுப்​படுத்​தும் வகை​யில் கூடு​தல் வழி​காட்​டு​தல்​களும் வழங்​கப்​பட்​டன.

அதன்​படி வெற்​றிப் பள்​ளித் தலை​மை​யாசிரியர்​களு​டன் மாதந்​தோறும் இணை​யவழி​யில் ஆய்​வுக் கூட்​டம் நடத்தி பள்​ளி​களின் செயல்​பாடு​கள், கற்​பித்​தல் முன்​னேற்​றம் ஆகிய​வற்​றைத் தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும்.

ஒவ்​வொரு சனிக்​கிழமை பயிற்சி வகுப்​புக்கு பின்​பும் மாணவர், ஆசிரியர் வரு​கை, கற்​பிக்​கப்​பட்ட பாடப்​பகு​தி​கள், சிறப்பு செயல்​பாடு​கள் மற்​றும் எதிர்​கொண்ட சவால்​கள் தொடர்​பான விவரங்​களை மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​களிடம் பெற்​றுத் தொடர் கண்​காணிப்பு மேற்​கொள்ள வேண்​டும்.

மாதிரிப் பள்​ளி​களால் மதிய உணவு வழங்​கப்​ப​டாத வெற்​றிப் பள்​ளி​களில் தலைமை ஆசிரியர்​களு​டன் கலந்​தாலோ​சித்து மாணவர்​களுக்​குத் தரமான மதிய உணவு வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி