சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட பொது அறிவிப்பு: சென்னை பல்கலைக் கழகம் சார்பில் செயல்படுவதாகவோ அல்லது அதை பிரதிநிதிப்படுத்துவதாகவோ கூறிக்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள், முகமைகள், நிறுவனங்கள் மற்றும் சேர்க்கை மையங்களுடன் பொதுமக்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்த விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோளிங்கர் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் ஆஸ்கார் ஆன்லைன் அட்மிஷன் சென்டர் என்ற நிறுவனம், சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மையம் அல்ல. எனவே, சென்னை பல்கலைக்கழக நேரடி மாணவர் சேர்க்கை, இணையவழி மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுமக்கள் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி