சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, உயர்கல்விக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
முதலில் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்ற தவறிய மேலும் ஆசிரியர்களின் போராட்டதை கொச்சை படுத்தி ஒரு மாதம் ஊதியத்தை பிடித்தம் செய்து இறக்கிமின்றி ஆசிரியர்களை கடன் வாங்கி வீட்டு வாடகை கொடுக்கும் சூழ்நிலை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை மாற்று துறைக்கு மாற்றி விட்டு , ஆசிரியர்கள் மேல் அக்கறை கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அப்போது தான் இதற்கு தகுந்த உரிய தீர்வு கிடைக்கும.
ReplyDeleteமுதல் காரியமாக உங்கள் சங்க பொறுப்பாளர்களை பெட்டி பணம் பிரச்சனையாக பெறுவதை நிறுத்து சொல்லுங்கள்
Deleteஎன்னது கடன் வாங்கி வீடு வாடகை கொடுத்தார்களா? உருட்டில் பல வகை இது ஒரு வகை. நீங்க பேசாம சினிமா துறையில் கதை எழுத போகலாம் தோழரே
Delete