அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் (டி பிரிவு ஊழியர்கள் தவிர) நலன் கருதி பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜூலை 15 (இன்று) முதல் 24-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி