தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் - முக்கிய அம்சங்கள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2026

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் - முக்கிய அம்சங்கள்:

 

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு.

உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.

ரூபாய் 122.51 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்; ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்.

பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்கு ரூ.203.46 கோடி நிதி ஒதுக்கீடு.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில் என்ற அடிப்படையில் ஒவ்வொரு உழவருக்கும் AI அடிப்படையிலான உழவர் செயலி; இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு.

பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் ரூ.27.21 கோடி ஒதுக்கீடு.

எல் நினோ காரணமாக 12 மாவட்டங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி