பொறியியல் டிப்ளமா தேர்வு: மாணவர்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2026

பொறியியல் டிப்ளமா தேர்வு: மாணவர்களின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு

 

பொறி​யியல் டிப்​ளமா தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் சான்​றிதழ்​களை இது​வரை பெறாத பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் இன்று முதல் செப்.3 வரை பெற்​றுக்​கொள்​ளலாம் என தொழில்​நுட்​பக் கல்​வித் ​துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை: கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற டிப்​ளமா தேர்​வு​களை (ஆர்​.2023 திட்​டம்) எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் தற்​காலிக சான்​றிதழ் மற்​றும் ஒருங்​கிணைந்த மதிப்​பெண் பட்​டியலை ஆக.3 முதல் 7-ம் தேதி வரை பெற்​றுக்​கொள்​ளு​மாறு அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் அறி​வுறுத்​தப்​பட்​டன. ஆனாலும், பல கல்​லூரி​கள் இது​வரை இவற்றைப் பெற​வில்​லை.

மாணவர்​களின் டிப்​ளமா சான்​றிதழ்​களும் தற்​போது தயார் நிலை​யில் இருப்​ப​தால் அவர்​களுக்கு விரை​வாக வழங்​கும் பொருட்டு கல்​லூரி​யின் பிர​தி​நி​தியை உரிய அனு​மதி கடிதத்​துடன் அனுப்​பி, ஆக.31 (இன்று) முதல் செப்.3 வரை தற்​காலிக சான்​றிதழ், ஒருங்​கிணைந்த மதிப்​பெண் பட்​டியல் மற்​றும் டிப்​ளமா சான்​றிதழ்​களை தொழில்​நுட்​பக் கல்வி இயக்கக கணினி பிரி​வில் பெற்​றுக்​ கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி