TNPSC மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2026

TNPSC மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உத்தரவு.

 

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி தெரிவுப்பட்டியலின்படி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021. தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார். (2)திரு Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும். நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.


2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும். அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.

DEO-DR- Regular Appointment.pdf

👇👇👇👇

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி