அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
நம் நாட்டில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை பண்டிகை காலமாகும். தசரா, ஆயுதபூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ந்து பண்டிகைகள் அணிவகுத்து வரும்.
இந்த பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதும்,பணடிகை காலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.
ஆனால் இந்த முறை அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் வீட்டு உபயோக பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரிக்கும் என்று அறிவிக்கப்படடுள்ளது. அதன்படி எல்டிஇ டிவி, வாஷிங்மெஷின், ஏசி, ப்ரிட்ஜ் உள்பட பிற வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 8 சதவீதம் வரை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏசியின் விலை 5 முதல் 8 சதவீதம் வரை கம்பெனிகளை பொறுத்து உயர உள்ளது. எல்இடி டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது வரை ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்ஸ், ஹையர், டெய்க்கின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. 'பானசோனிக்' நிறுவனம் இன்னும் விலை உயர்வை அறிவிக்காத நிலையில் விரைவில் அதுபற்றி அறிவிக்க உள்ளது.
இந்த விலையேற்றத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. பணவீக்கம் காரணமாக விலை உயர்ந்து வரும் காப்பர், அலுமினியம், ஸ்டீல், போர் சூழலால் உயரும் கச்சா எண்ணெய் உபபொருட்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் சரக்கு கட்டணங்கள் உள்ளிட்டவற்றால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
இந்த 2026ம் ஆண்டில் இதுவரை 2 முறை வீட்டு உபயோக பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்த நிலையில் தற்போது 3 வது முறையாக அதிகரிக்க உள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் பல டீலர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சலுகைகள் வழங்கும்போது அதிகளவில் பொருட்கள் விற்பனையாகும். ஆனால் இந்த முறை விலை உயர்த்தப்பட்டால் தங்களின் விற்பனை பாதிக்கலாம் என்று அச்சமடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி