வங்கி ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2026

வங்கி ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு!

 

மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, ஐபிஏ உடன் நேற்று இரவு (9.30 மணிக்கு) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்படுகிறது.

புதுடில்லி: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வங்கிகள் ஸ்டிரைக், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.


'வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான பாரபட்சமான நடவடிக்கையை மாற்றுதல், ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியார் மயமாக்கக்கூடாது' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து, கடந்த 11ம் தேதியன்று முதல்கட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


இரண்டாவது கட்டமாக, செப்., 28 (இன்று) முதல் 30ம் தேதி வரை, மூன்று நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.


பேச்சுவார்த்தை:


இச்சூழலில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கக் கூட்டமைப்பும் கலந்து கொண்டன. நள்ளிரவு வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிற்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.


உயர்நிலைக் குழு அமைப்பு:


​இதன்படி, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிப்பது குறித்து, வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று வழிகளை ஆராய்ந்து முடிவெடுக்க, உயர்மட்டக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டம் (பி.எல்.ஐ.,) தொடர்பான மாற்றங்கள் குறித்து, அரசிடம் பேசி சுமுகத் தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பிற கோரிக்கைகள் குறித்தும் விரைந்து பேசி முடிக்க, இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.


​வழக்கம்போல் வங்கிகள் இயங்கும்:


பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில், திட்டமிட்ட போராட்ட நடவடிக்கைகளையும், 3 நாள் ஸ்டிரைக்கையும் ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.,) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ​இதனால் இன்று வழக்கம்போல் அனைத்து வங்கிகளும் செயல்படும்.


நிம்மதி:


ஸ்டிரைக் காரணமாக, மாதத்தின் கடைசி வாரத்தில் வங்கிச் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்ட நிலையில், அந்த அபாயம் தவிர்க்கப்பட்டதால், வாடிக்கையாளர்களும், வர்த்தகர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி