ஒரே நாளில் காலாண்டுத் தேர்வும் முதல்வர் கோப்பை போட்டியும்! தீவிர குழப்பத்தில் மாணவர்கள் & ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2026

ஒரே நாளில் காலாண்டுத் தேர்வும் முதல்வர் கோப்பை போட்டியும்! தீவிர குழப்பத்தில் மாணவர்கள் & ஆசிரியர்கள்!

காலாண்டு தேர்வு அறிவித்த நாட்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடப்பதால், மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி செப்., 9 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான அனைத்து போட்டிகளும் செப்., 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடை பெற உள்ளது. இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு செப்., 16 முதல் 25 வரை நடத்தப்படும் என அட்டவணை வெளியிட்டுள்ளனர். 

ஒரே நாட்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு மற்றும் காலாண்டு தேர்வு நடப்பதால், தேர்வு, விளையாட்டு இவை இரண்டில் எதில் பங்கேற்பது என தெரியாமல் மாணவர்கள் புலம்பி தவிக்கின்றனர்

1 comment:

  1. முதல்வர் கோப்பை விளையாட்டை தள்ளி வையுங்கள் படிப்புதான் முக்கியம்,4ம்வகுப்பு மாணவன் 12ம் வகுப்பு மாணவரை எதிர்த்து விளையாட்டு எலியுடன் யானை போதும் விளையாட்டு வயது வித்யாசம் இல்லாத தரம் கெட்ட விளையாட்டுப்போட்டி தேவை இல்லாத ஒன்று, காலாண்டு தேர்வு முக்கியம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி