ஆசிரியர்களுக்கு அதிகரிக்கும் ஆன்லைன் பணி ஏ.ஐ.,க்கள் எங்கே என கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2026

ஆசிரியர்களுக்கு அதிகரிக்கும் ஆன்லைன் பணி ஏ.ஐ.,க்கள் எங்கே என கேள்வி

 

கல்வித்துறையில் 'எமிஸ்' பதிவேற்றம் உள்ளிட்ட ஆன்லைன் பணிகளால் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக தி.மு.க., ஆட்சியில் புகார் எழுந்தது. 


இதனால் ஆன்லைன் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'அசிஸ்டெண்ட் இன்ஸ்ட்ரக்டர்' (ஏ.ஐ.,) என்ற கணினி உதவியாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் 'அவுட்சோர்ஸ்' அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் தொடக்க, நடுநிலையில் குறைந்தது 3 பள்ளிகளுக்கு ஒரு ஏ.ஐ., நியமிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் ஆன்லைன் சார்ந்த பணிகளுடன், ஹைடெக் லேப்களையும் கண்காணிக்கும் வகையில் பணிகள் ஒதுக்கப்பட்டது. 


இதனால் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பணிகள் குறைந்து கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஆன்லைன் பணிகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: ஏ.ஐ.,க்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப அருகாமை பள்ளிகளுக்கு மாறுதலில் சென்று விட்டனர். இதனால் அவர்கள் கவனிக்க வேண்டிய ஆன்லைன் பணிகளை வேறு வழியின்றி ஆசிரியர்களே மேற்கொள்கின்றனர்.


 'எமிஸ்' பதிவேற்றம், மாணவரின் ஆதார் அப்டேட் உள்ளிட்ட இப்பணிகளிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆன்லைன் பதிவேற்றப் பணிகள் மீண்டும் சுமையாக மாறிவிட்டது. கற்பித்தலில் கவனம் செலுத்துவது சவாலாக உள்ளது. அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

4 comments:

  1. ஆசிரியர்க்ளுக்கு மற்றும் கல்வித்துறைக்கு பணிச்சுமை வந்தால் மட்டுமே ஏ.ஐ. எங்கே என்று தேடுவார்கள் , அவர்களுடைய பணிச்சுமை , மற்றும் மிக சொற்ப ஊதியம் , போக்குவரத்துக்கு படி இல்லை அதை பற்றி யாராவது அரசுக்கு கூறியதுண்டா ?மூன்று ஆண்டுகளாக எமிஸ் வருகை பதிவேடு பராமரித்த நிலையில் அதை தற்போது நீக்கியதை யாராவது அரசிடம் கேட்டனாரா ?மிகவும் குறைந்த சம்பளத்தில் (9700 ரூபாய் ,) மே மாதம் ஊதியம் இல்லை , ஆனால் மாற்று சான்றுதல் பனி மாணவர்குளுக்காக , புதிய மாணவர் சேர்க்கை பனி பணிபுரிகின்றனர் .அவர்களுக்கான ஊதிய உயர்வு பற்றி அரசிடம் கோரிக்கை வைத்தீர்களா

    ReplyDelete
  2. மேலும கணினி ஆயவகங்களை சிறப்பாக பராமரிப்பதே அவர்குளுடைய முக்கிய பணிகள் , கூடுதலாக ஏமிஸ் யூடிஸ் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான அலுவலக பனி , மாணவர்களுக்கான தேர்வு சார்ந்த நகல் எடுக்கும் பனி , மற்றும் ஏராளமான பணிகள் ,பணிகள் செய்தும் , மேலும் அதிகமான காலி பணியிடங்களையும் சேர்த்து அதிகமான நபர்கள் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் கூடுதலாக வேலை பார்க்கும் அவலம் .தொழிலார் சட்டப்படி நாள் ஒன்றுக்கு 750 வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் , மற்ற துறைகளை உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு18000 வழங்கப்படுகின்றன

    ReplyDelete
  3. ஏஐ வசதிக்கேற்ப அருகாமை பள்ளிகளுக்கு செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஏஐ சம்பளம் 9700 மட்டுமே . போக்குவரத்து படி இல்லை. அதை வாங்கி தர வேண்டும்.ஆட்டோ கட்டணம் கொடுத்து வர அவர்கள் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் வாங்கல. 323 ருபாய் நாள் ஒன்றுக்கு. கஷ்டமான சூழல்.

    ReplyDelete
  4. ஏஐ வேலை என்பது உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை திறம்பட இயங்கச் செய்வது, மற்றும் பராமாரிப்பது தான் பிரதான பணி. ஆசிரியர்களுக்கான கற்றல் பணி எமிஸ்,யுடைஸ் வேலையால் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் நலனுக்காக ஏஐ பணியாளர்கள் கூடுதலாக எமிஸ் யுடைஸ் பணி பார்த்துவருகின்றனர். பல பளளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான அலுவல் பணி , ஆசிரியர்களுக்கான அலுலல் பணி, மாணவர்களுக்கான நகல் எடுக்கும் பணி, ஆக மொத்தம் கிளாரக் வேலையுயம் கூடுதலாக பார்த்தும் குறை சொல்ல சிலர் கிளம்பி விடுகின்றனர் . நிறைய தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியரகள் வட்டார மைய அலுவலர்கள் ஏஐ சிறப்பாக பணாபுரிகின்றனர் என்று பாராட்டி விருது கூட வாங்கி உள்ளனர். அதை செய்தித்தாளில் வருவதில்லை. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மற்றும் smart class
    பராமாரிப்பு தான் பிரதான பணி. மற்ற வேலைகளை தரவு தந்தால் மட்டுமே அவர்களு ஒரே பள்ளியில் இருந்து பணியை முடிப்பர். . தினமும் வெவ்வேறு பள்ளிகளுக்கும் அழைந்து திரியும் அளவுக்குக் அவர்களுடைய சம்பளம் இல்லை, போக்குவரத்து படியும் இல்லை. மீணடும் எமிஸ் எண் கிடைதத்இட, ஊதிய உயர்வு அதை சரி செய்ய தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மையம், ஆசிரியர் சங்கங்கள் உதவி செய்தால் நாங்களும் மகிழ்ச்சியாக போக்குவரத்து செலவு செய்து அனைத்து பள்ளிகளுக்கும் சென்று வர தயார். வெறும் 9700 வைத்துக் கொண்டு அதில் பாதி ஒரு நாளைக்கு 100 முதல் 200 வரை பலருக்கு போக்குவரத்து செலவு ஆகின்றது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி