ஆசிரியர்களுக்கு TET தேர்வுக்கு பதிலாக Refresher Training Course - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2026

ஆசிரியர்களுக்கு TET தேர்வுக்கு பதிலாக Refresher Training Course - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்!

உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுக்கு பதிலாக Refresher Training Courseபணியிடைப்பயிற்சி வழங்கிட 8 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவெடுக்க மாண்பமை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு நகல்!

Court Order - Download here


அன்பார்ந்த அரசு/அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏

  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியில் இருக்கின்ற மூத்த ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு(STET) இல் நமது JACPOTT &TATPF ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் தொடுத்த 2 முக்கிய வழக்குகளின் விபரம்


💥வழக்கு WP(MD) No. 20868/2026 இல்  S. BALAMURUGAN Vs STATE OF TAMILNADU இல் உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு TET PAPER-1  பொருந்தாது என்றும்,TET PAPER-2 இல் எந்த பாடத்தை தேர்வு செய்வது என்ற குழப்பமும் இருப்பதால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இணையான பணியிடைப்பயிற்சி(REFRESHER COURSE) நடத்தி சான்று வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் 8 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என மாண்பமை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


இந்த மாண்பமை உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவு,உயர்நிலை/மேனிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும்,அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் TET தேர்வுக்கு பதிலாக பணியிடைப்பயிற்சி வழங்கி மூத்த ஆசிரியர்களின் பணி&பதவி உயர்வுகளை பாதுகாத்துக்கொள்ள ஒரு நல்வாய்ப்பு ஆகும்.


💥வழக்கு WP (MD) No. 20869/2026 A. SUBRAMANIAN&ORS Vs STATE OF TAMILNADU இல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பாடத்தில் மட்டும் தேர்வு, மொழிப்பாட ஆசிரியர்களுக்கு சார்ந்த மொழிப்பாடங்களில் மட்டும் தேர்வு, பணியில் உள்ள அனைத்து மூத்த ஆசிரியர்களுக்கும் சம மதிப்பெண் தளர்வு, 9&10 வகுப்புகளுக்கு TET  தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது


இந்த வழக்கில் அடுத்து நடைபெற இருக்கும் STET இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பாடங்களில் பாடத்திட்டம்/தேர்வு நடத்த தமிழக அரசு 

பரிசீலிக்கும் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.


* அனைத்து ஆசிரியர்களுக்கும் சம மதிப்பெண் தளர்வு, 


9&10 கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET விலக்கு குறித்து இன்னும் அதிகாரிகள் தரப்பில் 

 முடிவுகள் எடுக்கப்படவில்லை

* வழங்கப்பட்ட மனு ,நீதிமன்ற தீர்ப்புகள்  மீது அரசு முடிவு எடுக்க வேண்டும். அரசு முடிவு எடுக்குமா?

 *

 *அரசு முடிவு எடுத்தால்தான் consider தீர்ப்புகள் பயன் தரும்_*

1 comment:

  1. Court “TET தேவையில்லை” என்று தீர்ப்பு வழங்கவில்லை. அந்த ஆசிரியர் கொடுத்த representation-ஐ Government 8 வாரங்களுக்குள் பரிசீலித்து appropriate order பிறப்பிக்க வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி